பயிர்களை பாதுகாக்க பறவை படுக்கைகள்!
செயற்கையாக தயாராகும் பயிர் பாதுகாப்பு மருந்துகளை பயன்படுத்தாமல் அந்த நிலத்தில் கிடைக் கும் பொருட்களை பயன்படுத்தி பயிரை காப்பது தான் சிறந்தவழி. வேலிப்பகுதியில் உள்ள மரக்கிளைகளில் பறவைகள் உட்கார வசதி செய்ய வேண்டும். மரங்கள் இல்லாவிட்டால் தரையிலிருந்து 5 – 6 அடி உயர குச்சிகளை “டி’ வடிவில், கவட்டை வடிவில் கட்டினால்
பறவைகள் உட்கார முடியும்.
இதன் மூலம் வயலில் உள்ள தாய்ப்பூச்சி, புழு மற்றும் கூட்டுப்புழுக்களை பறவைகள் பிடித்து உண்ணும். இரவில் உலா வரும் ஆந்தை, கூகை, கோட்டான்களும் அமர்ந்து எலிகளை பிடித்து உண்ணும். இதற்கு ரசாயன மருந்தோ, வேறு செலவுகளோ தேவையில்லை.
ஏக்கருக்கு 20 இடங்களில் இதுபோன்ற பறவை இருக்கைகளை நிரந்தரமாக கட்டி வைத்தால் அறுவடை காலத்தில் சேதத்தை தவிர்க்கலாம்.
காலி டப்பாக்கள், பெரிய டின், பயன்படாத சைக்கிள் டயர், கார் டயர், கம்பு, மருந்து டப்பாக்களிலும் ஆங்காங்கே கட்டி தொங்கவிட்டால் பறவைகள் அவற்றை கூடுபோன்று பயன்படுத்தும்.